கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறில் இருந்து 20 கி.மீ தொலைவில் ராஜமலை பெட்டிமுடி பகுதி உள்ளது. இங்கு தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்காக கட்டித் தரப்பட்ட கட்டடம் கடந்த ஆகஸ்ட் ஆறாம் தேதி இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணில் புதைந்தது. இவ்விபத்தில் 80க்கும் மேற்பட்டவர்கள் சிக்கியிருக்கலாம் என அறியப்பட்ட நிலையில், தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர், பேரிடர் மீட்புக் குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மூணாறு நிலச்சரிவு : உயிரிழந்தோர் எண்ணிக்கை 56ஆக உயர்வு! - கேரளா பெட்டி முடி
திருவனந்தபுரம் : மூணாறு, ராஜமலை பெட்டிமுடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 56ஆக அதிகரித்துள்ளது.
munaeae
தற்போது வரை 55 பேர் நிலச்சரிவில் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒருவரின் சடலத்தை மீட்புப் படையினர் கண்டெடுத்துள்ளனர். இதனால், மூணாறு நிலச்சரிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது. மேலும், நிலச்சரிவில் காணாமல் போன 14 பேரை மாநில மற்றும் தேசிய அளவிலான பேரிடர் மீட்புப் பணிக் குழுவைச் சேர்ந்த வீரர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.