தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 19, 2019, 1:59 PM IST

ETV Bharat / bharat

மூளைக் காய்ச்சலில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

பாட்னா: பிகார் மாநிலத்தில் மூளைக் காய்ச்சலால் இதுவரை 112 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Acute Encephalitis Syndrome

பிகார் மாநிலம் முசாஃபர் நகர் மாவட்டத்தில் அக்கியுட் என்சிபாலிட்டிஸ் சிண்ட்ரோம் (Acute Encephalitis Syndrome) எனப்படும் மூளைக் காய்ச்சல் பரவிவருகிறது. இந்தக் காய்ச்சல் குறிப்பாக குழந்தைகள், முதியோர்களைத் தாக்கிவருகிறது. இந்தக் காய்ச்சலால் தலைவலி, காய்ச்சல், உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் குளூகோசின் அளவு மிகக் குறைவாகவே இருக்கும்.

இந்நிலையில், முசாஃபர் நகரில் மட்டும் இதுவரை மூளை காய்ச்சலால் 112 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு இன்று தெரிவித்துள்ளது. உயிரிழப்புகளை குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை பிகார் அரசு எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ள நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details