கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்துவருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. கிட்டத்தட்ட 2 லட்சம் மக்கள் வெள்ளம் காரணமாக தங்களின் வீடுகளை இழந்துள்ளனர்.
கேரளா வெள்ள பாதிப்பு; பலி எண்ணிக்கை உயர்வு! - கேரளா வெள்ளம்
திருவனந்தபுரம்: கேரளா வெள்ளத்தில் சிக்கி இதுவரை 104 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கேரளா வெள்ளம்
இந்நிலையில், கேரளா வெள்ளத்தில் சிக்க 104 பேர் உயரிழந்துள்ளதாகவும் 36 பேர் மாயமாகியுள்ளதாகவும் அரசு தரப்பு தகவல் தெரிவிக்கிறது. மேலும் தேசிய பேரிடர் மீட்பு படை, பாதுகாப்பு படை ஆகியவை வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்டுவருகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு, மலப்புரம் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படை தீவிரம் காட்டிவருகிறது.
Last Updated : Aug 16, 2019, 11:20 AM IST