கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்துவருகிறது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. காசர்கோடு, பாலக்காடு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தினால் இரண்டு லட்சம் மக்கள் தங்களின் வீடுகளை இழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கேரள அரசு அமைத்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கேரளா வெள்ளம்; பலி எண்ணிக்கை 83ஆக உயர்வு! - கேரளா வெள்ளம்
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 83 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
Kerala Floods
இதுவரை, இந்த வெள்ளத்தில் சிக்கி 83 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்க பேரிடர் மீட்புப் படை, பாதுகாப்புப் படை ஆகியவை கேரளாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.