மூன்றடுக்கு மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளதாக தேசியப் பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
தானே கட்டட விபத்து: இதுவரை 20 பேர் சடலமாக மீட்பு - Maharashtra building collapse
மும்பை(மகாராஷ்டிரா): பிவாண்டியிலுள்ள பட்டேல் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மூன்று மாடிக் கட்டடம் பெருமழை காரணமாக நேற்று (செப்.21) அதிகாலையில் இடிந்து விழுந்தது. அதில் சிக்கி இதுவரையில் 20 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.
மகாராஷ்டிர மாநிலம், தானே மாவட்டத்தில் பிவாண்டியிலுள்ள பட்டேல் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மூன்று மாடிக் கட்டடம் பெருமழை காரணமாக நேற்று (செப்.21) அதிகாலை 3.40 மணியளவில் இடிந்து விழுந்தது. இவ்விபத்தில் இருந்து இதுவரையில் 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் நபர்களை தேசியப் பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். இவ்விபத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தேசியப் பேரிடர் மேலாண்மை மீட்புப்படையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து குறித்து குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த்தும், பிரதமர் நரேந்திர மோடியும் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.