இந்தியாவில் கரோனா வைரஸின் பிறப்பிடமாக கேரளா இருந்தாலும் அதன் மையப்பகுதியாக மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் மாறியுள்ளன. மேற்கூறிய மூன்று மாநிலங்களில் தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், நாட்டில் நேற்று ஒரேநாளில் புதிதாக 5,609 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதியான நிலையில் 132 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,12,359ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,435ஆகவும் அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 3002 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 45,300ஆக அதிகரித்துள்ளது. இதனால் தற்போது 63,364 பேர் கரோனாவுக்காக சிகிச்சை பெற்றுவருகின்றனர்.