கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அணி அலுவலகத்திற்கு ஒரு கடிதம் வந்தது. அதில், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும், இளைஞரணி மாநிலச் செயலாளர் ரஹிமுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா ஆகிய அமைப்புகளைத் தொடர்ந்து விமர்சித்தால் வீட்டில் வைத்து கொலை செய்யப்படுவீர்கள் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பினராயி விஜயன் கொலை செய்யப்படுவார் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.