ஜார்கண்ட் மாநிலம் தும்காவில் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த வழக்கில், மூவருக்கு தூக்கு தண்டனை வழங்கி அம்மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் நடைபெற்று 28 நாள்களில் நீதிமன்றம் தனது அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த மூவருக்கு தூக்கு! - சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த மூவருக்கு தூக்கு
18:09 March 03
ராஞ்சி: ஆறு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த வழக்கில் மூவருக்கு தூக்கு தண்டனை விதித்து ஜார்கண்ட் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிப்ரவரி 5ஆம் தேதி, தனது தாத்தா வீட்டிற்கு அச்சிறுமி சென்றுள்ளார். அப்போது உறவினர் என சொல்லிக் கொண்டு வந்த மித்து ராய் என்பவர் அச்சிறுமியை அழைத்து சென்று மூவருடன் இணைந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இறந்த சிறுமியின் உடலை அருகில் உள்ள புதரில் அவர்கள் புதைத்துள்ளனர்.
பின்னர், மற்றவர்களுடன் சேர்ந்து அச்சிறுமியை தேடுவதுபோல் அவர் நாடகமாடியுள்ளார். அச்சிறுமியின் உடலை காவல்துறையினர் கண்டெடுத்ததைத் தொடர்ந்து, மும்பையில் மித்து சாய் சரணடைந்தார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையின்படி, மற்ற இரு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மூவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புல்வாமா தாக்குதல்: தந்தை-மகள் இருவரை என்.ஐ.ஏவால் கைது!