தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவால் கைவிட்ட உறவினர்கள்; உடலை தள்ளுவண்டியில் கொண்டுசென்ற அவலம்! - தள்ளுவண்டியில் கொண்டு செல்லப்பட் முதியவர் உடல்

கரோனா அச்சம் காரணமாக இறந்தவர் உடலைத் தகனம் செய்ய உறவினர்கள் யாரும் முன்வராததால், உடலைத் தள்ளுவண்டியில் வைத்து தகனம் செய்யும் இடம் வரை எடுத்துச் சென்ற சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

COVID-19
COVID-19

By

Published : Jul 19, 2020, 8:20 AM IST

கர்நாடக மாநிலம் அதானி தாலுக்கா பெலகாவியில் இரண்டு தினங்களுக்கு முன்னர், முதியவர் ஒருவர் உயிரிழந்தார். அவர் கரோனா தொற்றால்தான் உயிரிழந்திருக்கூடும் என நினைத்து அவரது உறவினர்கள் பலரும், முதியவரின் உடலைத் தகனம் செய்ய முன்வரவில்லை. இதனால் தன் கணவரின் உடலை எப்படி தகனம் செய்வது என்று புரியாமல் தவித்துக்கொண்டிருந்தார் அவரது மனைவி.

அப்போது ஒரு தள்ளுவண்டிக்காரர் இவர்களுக்கு உதவ முன்வந்துள்ளார். இதனையடுத்து உயிரிழந்த முதியவரின் உடலை, தள்ளுவண்டியில் வைத்து தகனம் செய்யும் இடம் வரை அவரது மனைவியும், மகனும் கொண்டு சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தை பார்த்த சிலர், வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. கரோனா அச்சத்தால் மனிதர்கள் மனிதாபிமானத்தை இழந்து நிற்பதாகப் பலரும் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.முதியவர் கரோனா தொற்றால் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்தவர் உடலை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற அவலம்

இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் இதுவரை 55 ஆயிரத்து 115 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 ஆயிரத்து 757 பேர் குணமடைந்துள்ளனர்; 1,147 உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க:மரிக்கும் மனிதம்: கரோனா இல்லாமல் இறந்தும் உடலுக்கு அனுமதி மறுப்பு

ABOUT THE AUTHOR

...view details