தென்மேற்குப் பருவ மழை எப்போது வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு வழியாக தற்போது வந்துவிட்டது. ஆந்திரா - ஒடிசா எல்லைப்பகுதிகளிலுள்ள பள்ளத்தாக்கில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.
ஒருபுறம் சிவப்பு... மறுபுறம் வெள்ளை, பட்டையைக் கிளப்பும் துதுமா நீர்வீழ்ச்சி - ஆந்திரா
ஹைதராபாத்: கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையின் காரணமாக, துதுமா நீர்வீழ்ச்சியில் ஒருபுறம் வெண்மையான நிறத்திலும் மறுபுறம் சிவப்பு நிறத்திலும் அருவி பாய்ந்து செல்கிறது.
துதுமா நீர்வீழ்ச்சி
இதன் காரணமாக இயற்கை எழில் சூழ, ஆந்திர - ஒடிசா எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் துதுமா நீர்வீழ்ச்சியில் ஒரு புறம் ஒருபுறம் வெண்மையான நிறத்திலும், மறுபுறம் அடித்துவரப்பட்ட மண்ணுடன் சிவப்பு நிறத்திலும் அருவி பாய்கிறது.
சுமார் 515 அடி உயரமுள்ள இந்த அருவியில், ஒரு புறம் வெள்ளை மறுபுறம் சிவப்பு என இருவேறு நிறங்களில் வரும் இந்த அற்புதக் காட்சியை பலரும் ரசித்து செல்கின்றனர்.