தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 22, 2020, 8:25 AM IST

ETV Bharat / bharat

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டப்பின் காஷ்மீரில் நடைபெற்ற முதல் தேர்தல்!

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்குப் பிறகு அம்மாநிலத்தில் முதல்முறையாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

மாவட்ட வளர்ச்சி கவுன்சில்
மாவட்ட வளர்ச்சி கவுன்சில்

சிறப்பு அந்தஸ்து நீக்கம்

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பாஜக அரசு, கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி நீக்கியது. இதனைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது.

மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெற்றது. அதனுடன் சேர்த்து உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டப்பின், ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற முதல் தேர்தல் இதுவாகும். ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் உள்ள 280 மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 19ஆம் தேதிவரை எட்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில், 51 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.

இத்தேர்தலில், தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி), மக்கள் மாநாடு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள், குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணியை உருவாக்கி முதல் முறையாக தேர்தலை சந்திக்கின்றன. தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளன.

வாக்கு எண்ணிக்கை

மொத்தம் உள்ள 280 மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் இன்று (டிச.22) எண்ணப்படவுள்ளன. ஒவ்வொரு மாவட்ட வளர்ச்சி கவுன்சிலிலும் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 14 உறுப்பினர்களைக் கொண்டு நிதி, மேம்பாடு, பொதுப்பணி, சுகாதாரம், கல்வி மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றிற்காக, ஐந்து நிலைக்குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.

இதையும் படிங்க:ஜம்மூ காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

ABOUT THE AUTHOR

...view details