வடக்கு டெல்லியின் புராரிப் பகுதியில் 18 ப்ளஸ் என்ற பெயரில் அழகு நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் இணையதளத்தில் சில பெண்களின் புகைப்படங்களைப் பதிவிட்டு அருகில் விலைப் பட்டியலும் இணைக்கப்பட்டிருந்தது. இது டெல்லி மகளிர் ஆணையத்தின் கவனத்திற்கு வரவே, துரித நடவடிக்கையில் இறங்கினர்.
உல்லாச விடுதியான அழகு நிலையம்... 4 சிறுமிகள் மீட்பு! - விபச்சாரம்
டெல்லி: அழகு நிலையத்தில் வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தவர்களை மகளிர் ஆணையம் உதவியுடன், காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து டெல்லி குற்றப்பிரிவு காவல் துறையினரின் உதவியை நாடியது மகளிர் ஆணையம். இதனையடுத்து அழகு நிலையம் அமைந்திருந்த குறிப்பிட்ட இடத்திற்குள் காவல்துறையினருடன் நுழைந்த மகளிர் ஆணையம், அங்குச் சோதனை நடத்தியது.
சோதனையின் முடிவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சுவாதி மாலிவால், பாலியல் தொழில் அங்கு நடந்ததற்கு ஆதாரமாக, சில பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது எனவும், நான்கு சிறுமிகளை மீட்டதாகவும் தெரிவித்தார். மேலும், அந்நிலையத்தில் சோதனையிடும்போது சந்தேகத்திற்கிடமான மூன்று வாடிக்கையாளர்கள் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.