மருத்துவ மாணவர்கள் நெக்ஸ்ட் என்ற தேர்வை எழுதினால் தான், மருத்துவர் பயிற்சி மேற்கொள்ளவும், மேல் படிப்பில் சேரவும் முடியும் என தேசிய மருத்துவ ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜூனியர் மாணவரை தாக்கிய காவல்துறை அலுவலரை கண்டித்து போராட்டம்...!
அமராவதி: ஆந்திராவில் மருத்துவ மாணவர்களின் போராட்டத்தின்போது, ஜூனியர் மாணவர் ஒருவரை தாக்கிய துணை காவல் இயக்குநரை கண்டித்து மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜூனியர் மாணவரை தாக்கி காவல் துறை அதிகாரி: வெடித்த போராட்டம்!
இந்நிலையில் ஆந்திர மாநிலம் விஜயவாடா என்டிஆர் சுகாதார பலகலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, ஜூனியர் மருத்துவ மாணவர் ஒருவரை துணை காவல் இயக்குநர் கண்ணத்தில் அறைந்துள்ளார்.
இதை கண்டித்த மருத்துவ மாணவர்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.