தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா மருந்துக்கு அனுமதி! - கரோனா மருந்துக்கு அனுமதி

டெல்லி: மூன்று கரோனா மருந்து உள்பட 25 புதிய மருந்துகளை பயன்படுத்த மருந்துகள் கட்டுப்பாட்டுத்துறை இயக்குநரகம் அனுமதி வழங்கியுள்ளது.

கரோனா மருந்து
கரோனா மருந்து

By

Published : Aug 22, 2020, 10:52 PM IST

கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்துவருகிறது. நோயை கட்டுப்படுத்தும் மருந்துகளை கண்டுபிடிக்க உலக மருத்துவ விஞ்ஞானிகள் தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். உலகின் முதல் கரோனா மருந்தை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் கரோனா மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், மூன்று கரோனா மருந்து உள்பட 25 புதிய மருந்துகளை பயன்படுத்த மருந்துகள் கட்டுப்பாட்டுத்துறை இயக்குநரகம் அனுமதி வழங்கியுள்ளது. ரெம்டெசிவிர் தடுப்பூசி 5 ml, தடுப்பூசிக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் பவுடர் 100 mg ஆகியவை கரோனா சிகிச்சைக்காக அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சிறுநீரகம் பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சுக்ரோஃபெரிக் ஆக்ஸிஹைட்ராக்சைடு மருந்தை பயன்படுத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கரோனா சிகிச்சைக்காக ருக்சோலிட்டினிப் 5 mg மருந்தை பயன்படுத்த மூன்றாம் கட்ட ஆய்வக பரிசோதனையை மேற்கொள்ள உலக முன்னணி மருந்து நிறுவனமான நோவார்டிஸ் அனுமதி கேட்டிருந்தது. மருந்துக்கான அளவுகோல் குறித்த விவரங்கள் சமர்பித்த பின், அனுமதி வழங்கப்படும் என மருந்துகள் கட்டுப்பாட்டுத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு, 14 நாள்களுக்கு 12 மணி நேரத்திற்கு ஒரு முறை ருக்சோலிட்டினிப் 5 mg மருந்தை வழங்கினால், அவர்கள் உடலில் நல்ல மாற்றம் தென்படுவது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: ரூ.3.56 கோடி கஞ்சா பறிமுதல்; வருவாய் புலனாய்வு அலுவலர்கள் அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details