உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.
இந்நிலையில், கரோனாவுக்கு எதிராக Favipiravir 200mg மாத்திரையை பயன்படுத்துவதற்கான நான்காம் கட்ட பரிசோதனையை நடத்திட பார்மா நிறுவனத்திற்கு டிசிஜிஐ ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து டிசிஜிஐ கூறுகையில், "கோவிட்-19 நோயாளிகள் பல்வேறு நிலைகளில் சிகிச்சையில் அனுமதிக்கப்படும் சமயத்தில் உடனடியாக சிகிச்சையளிப்பதில் மருத்துவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அனைத்து தளங்களிலும் கவனிப்பின் தரநிலை தரப்படுத்தப்பட வேண்டும்.
நோயாளியின் பாதுகாப்பை தீவிரமாக கண்காணித்து மருந்து கட்டுப்பாட்டாளருக்கு தெரிவிக்கப்பட வேண்டும். சோதனை செயல்முறைக்கு ஸ்கிரீனிங்கில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். மேலும், நான்கட்ட கட்ட பரிசோதனைக்கு டிசிஜிஐ ஒப்புதல் அளிக்கையில், மருந்து நிறுவனத்திடம் 50 சதவீத அரசு தளத்தை ஆய்வுக்கு சேர்க்குமாறு என கேட்டுக்கொண்டனர்.
இந்த Favipiravir மாத்திரைகள் லேசான மற்றும் மிதமான கரோனா பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும், Favipiravir 600/800mg மாத்திரைகளை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் ஹெட்டெரோ லேப்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு டிசிஜிஐ அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.