தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இறைவன் மீது பாரத்தைப்போட்ட அரவிந்த் கெஜ்ரிவால்! - டெல்லி தேர்தல் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: சட்டப்பேரவை தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.

Delhi Elections
Delhi Elections

By

Published : Feb 8, 2020, 10:41 AM IST

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடத்தப்பட்டு வரும் 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிகழ்வதால் பரப்புரை களம் சூடுபிடித்திருந்தது.

இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "பலர் என்னைத் தொடர்பு கொண்டு அவர்கள்(எதிர்க்கட்சிகள்) தேர்தலை முன்னிட்டு பணம் விநியோகிப்பதாக புகாரளித்தனர். மேலும் பல சர்சைகளை கிளப்ப முயல்வதாக தெரிவித்தனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக நான் உங்கள் ஆசீர்வாதங்களை பெற்றுள்ளேன். கடைசி சில நாள்களாக அவர்கள் பல்வேறு குழப்பங்களை உருவாக்க முயன்றனர். ஆனால் அவை தோல்வியடைந்து. இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள். இறைவனின் சக்தி உங்களிடம் உள்ளது" என்று ட்வீட் செய்துள்ளார்.

இதையும் படிங்க: தேர்தல் நடத்தை விதிகளை மீறிய கேஜ்ரிவால் - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

ABOUT THE AUTHOR

...view details