கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. ஊரடங்கு காரணமாக விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதால், வெளிநாடுகளிலிருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, அமெரிக்கா, கத்தார், சவுதி அரேபியா, சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், வங்கதேசம், பஹ்ரைன், குவைத், ஓமன் ஆகிய 12 நாடுகளில் சிக்கியுள்ள 15 ஆயிரம் இந்தியர்களை அழைத்துவர மே 7 முதல் 13ஆம் தேதி வரை 64 சிறப்பு விமானங்களை இயக்கப்போவதாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து விமானங்கள் குறித்த கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள பலரும் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இணையதளத்திற்குச் சென்றுள்ளனர்.
ஒரே நேரத்தில் பலர் தளத்திற்கு வந்ததால், அது தற்போது முடங்கியுள்ளது. இதனை அந்த அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. "எதிர்பாராத வகையில் அதிக நபர்கள் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் தளத்திற்கு வந்ததால், அந்த இணையதளம் முடங்கியுள்ளது.