மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிம், ஹபீஸ் சயீத், மசூத் அசார், சக்கி-உர்-ரேஹமான் ஆகியோரை உபா சட்டம் எனப்படும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பயங்கரவாதிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தனி நபர் ஒருவரை பயங்கரவாதியாக அறிவிக்க வழிவகை செய்வது உபா சட்டமாகும்.
தாவூத் இப்ராஹிமை பயங்கரவாதியாக அறிவித்த இந்தியா! - பயங்கரவாதி
டெல்லி: தாவூத் இப்ராஹிம் உட்பட நான்கு பேரை உபா சட்டத்தின் கீழ் பயங்கரவாதிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Dawood Ibrahim
2008ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 26ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை, மும்பை குண்டுவெடிப்புத் தாக்குதல் நடந்தது. ஒரே நேரத்தில் 11 இடங்களில் துப்பாக்கிச்சூடும், குண்டுவெடிப்பும் பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பு மூலம் நடத்தப்பட்டது. உலகையே உலுக்கிய இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 164 பேர் கொல்லப்பட்டனர். 308 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.