தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டான் தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய உதவியாளர் கைது - டெல்லி காவல்துறை

டெல்லி: தப்பியோடிய டான் தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய உதவியாளரான அன்வர் தாக்கூரை டெல்லி காவல் துறையினர் கைது செய்தனர்.

Dawood Ibrahim's aide arrested
Dawood Ibrahim's aide arrested

By

Published : Jul 12, 2020, 5:06 PM IST

நாட்டின் தலைநகர் டெல்லியில் பரோலில் வெளி வந்த குற்றவாளியை, டெல்லி குற்றப் பிரிவினர் சந்து பாக் பகுதியில் கைது செய்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில்; 'ஒரு கொலை வழக்கில் ஆயுள் குற்றவாளியான, தாவூத் இப்ராஹிமின் உதவியாளரான அன்வர் தாக்கூர் ஜூலை 10ஆம் தேதி, பிரேசிலில் தயாரிக்கப்பட்ட ரூ.22 லட்சம் மதிப்புள்ள தானியங்கி கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது அவர் பண்தேவ் நகர் மயூர் விஹார் பேஸ் 1-ல் வசித்து வந்துள்ளார். டெல்லி காவல் நிலைய சதர் பஜார் உள்ளே ஒரு காவலரை சுட்டுக் கொன்றார். இதன் காரணமாகவே, இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. தற்போது, அவர் மார்ச் 17அன்று பரோலில் வெளியே வந்து பல கும்பலுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

மேலும் தற்போது பைசல்-உர்-ரெஹ்மான், பாப்லூ ஸ்ரீவாஸ்தவ் போன்ற மாஃபியாக்களுடன் அன்வர் தொடர்பில் இருந்ததாக தெரியவருகிறது' என அவர்கள் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details