இந்து வாரிசு உரிமை சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், சொத்து பங்கீட்டில் பெண்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சொத்து பங்கீட்டில் பெண்களுக்கும் சம உரிமை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
13:13 August 11
டெல்லி: சொத்து பங்கீட்டில் ஆண் பிள்ளைகளுக்கு நிகரான உரிமை பெண் பிள்ளைகளுக்கும் உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
இன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில், 2005ஆம் ஆண்டு இந்து வாரிசு உரிமை சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு பெற்றோர்களை இழந்த பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உள்ளதாக உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், திருமணமாகிச் சென்றாலும் பெற்றோர்களுக்கு மகள் என்பவர் மகள்தான் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
சொத்து பங்கீட்டில் ஆண் பிள்ளைகளுக்கு நிகராக பெண் பிள்ளைகளுக்கும் சம உரிமை வழங்க வழிவகை செய்ய, இந்து வாரிசு உரிமை சட்டத்தில் 2005ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு திருத்தத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மனைவியின் உயிரை மீட்ட கணவரின் காதல் - கர்நாடகாவில் ஒரு நெகிழ்ச்சி கதை!