தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்று வெளியாகிறது சிபிஎஸ்இ தேர்வுகளுக்கான அட்டவணை! - cbse exam timetable

இன்று மாலை ஐந்து மணிக்கு சிபிஎஸ்இ மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை, cbse exam time table
cbse exam time table

By

Published : May 16, 2020, 2:10 PM IST

டெல்லி: 10, 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளுக்கான அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

கரோனா நோய்க் கிருமியின் அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கல்வி நிறுவனங்கள் உள்பட மக்கள் கூடும் அனைத்து இடங்களும் மூடப்பட்டன. இதனையடுத்து மாணவர்களுக்கான தேர்வு முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துவந்தது. பொதுத்தேர்வின் முக்கியத்துவத்தை உணர்ந்து, மத்திய அரசு அதற்கான தேர்வு நடைபெறும் என்று தெரிவித்திருந்தது.

தோல்வியடைந்தால் கவலை வேண்டாம்... - வாய்ப்பளிக்கிறது சிபிஎஸ்இ!

அந்த வகையில் தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று மாலை 5 மணிக்கு 10, 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details