புதுச்சேரி மடுகரை பகுதியில் மதுக் கடையை திறந்து மதுபானம் எடுத்துச் சென்ற விவகாரத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தாசில்தார் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார். இது, வருவாய் துறை அலுவலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, வருவாய்த்துறை அலுவலர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்தனர்.
அதனடிப்படையில், புதுவை சார் ஆட்சியர் சுதாகர் இதுகுறித்து விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், தாசில்தார் கார்த்திகேயனை காவல்துறையினர் சட்டவிரோதமாக கைது செய்தது உறுதியானது.
இதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் மீதான புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராஜசூர்யா தலைமையிலான காவல்துறை விசாரணை ஆணையம் விசாரித்து அதில் விதிமுறைகளை மீறி வாரண்ட் இல்லாமல் தாசில்தார் கார்த்திகேயனை காவல்துறையினர் செய்ததாகவும் வீட்டில் பெண்கள் உள்ள நிலையில் நள்ளிரவில் ஆண் காவலர்கள் புகுந்து சோதனை நடத்தியதாகக் கூறப்பட்டது.