தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டிவி ஒளிப்பதிவாளர்; காவலர்கள் கொலை வழக்கு: நக்சல் சரண்! - நக்சல் சரண்

அக்டோபர் 2018ஆம் ஆண்டு நிலவேயாவில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் உட்பட மூன்று காவலர்கள் உயிரிழந்தனர். இதில் தொடர்புடைய தாண்டேவாடா மாவட்டத்தில் கட்டேகலினாவில் வசிக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதி பீமா மார்க்கம் (22) சத்தீஸ்கர் காவல் துறையினரிடம் சரணடைந்தார்.

நக்சல்
நக்சல்

By

Published : Jul 1, 2020, 4:43 PM IST

தாண்டேவாடா (சத்தீஸ்கர்):கட்டேகலினாவில் வசிக்கும் மாவோயிஸ்ட் தீவிரவாதி பீமா மார்க்கம் (22) சத்தீஸ்கர் காவல் துறையினரிடம் சரணடைந்தார்.

அக்டோபர் 2018ஆம் ஆண்டு நிலவேயாவில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் உட்பட மூன்று காவலர்கள் உயிரிழந்தனர்.

இதில் சம்பந்தப்பட்ட பீமா மார்க்கம் தலைக்கு காவல்துறையினர் தரப்பில் இரண்டு லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.

பெட்டேதாபாவில் 2019 ஆம் ஆண்டில் காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் இவருக்கு தொடர்பு உண்டு என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். நக்சல் மலாங்கிர் ஏரியா கமிட்டியின் கீழ் செயலில் உள்ள மாவோயிஸ்ட் படைப்பிரிவு எண் 24இல் உறுப்பினராக இவர் இருந்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details