தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அதிபரை வரவேற்க தயாராகும் தாண்டியா நடனக்குழு.!

காந்திநகர்: அமெரிக்க அதிபருக்கு தாண்டியா நடனக்குழு வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது.

By

Published : Feb 21, 2020, 11:00 PM IST

Dandiya Raas welcoming trump
Dandiya Raas welcoming trump

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியா வருகிறார். இந்தப் பயணத்தின்போது, குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோதிரா மைதானத்தை அதிபர் ட்ரம்ப் திறந்து வைக்கிறார்.

24ஆம் தேதி இந்தியா வரும் அதிபர் ட்ரம்பை வரவேற்க குஜராத்தின் போர்பந்தர் பகுதியைச் சேர்ந்த மகேர் மணியாரா நாட்டிய குழு தயாராகிவருகிறது. வாள் மற்றும் கேடயங்களுடன் இவர்கள் ஆடும் குஜராத்தின் நாட்டுப்புற நடனத்திற்கு ரசிகர்கள் ஏராளம்.

அமெரிக்க அதிபரை வரவேற்க தயாராகும் தாண்டியா நடனக்குழு!

இந்தியா மட்டுமின்றி உலகில் பல நாடுகளிலும் ஆடிய அனுபவம் இவர்களுக்கு உண்டு. அமெரிக்க அதிபர் முன் தங்கள் நடன ஆற்றலை வெளிப்படுத்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க:மத நல்லிணக்கத்தை போதிக்கும் காஷ்மீர் சிவன் ஆலயம்

ABOUT THE AUTHOR

...view details