விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாட்டுப் பிரபலங்கள் கருத்து தெரிவித்துவந்த நிலையில், அது வெளிநாட்டுச் சதி என வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியது.
இதனைத் தொடர்ந்து, மத்திய அரசுக்கு ஆதரவாக கிரிக்கெட்டர்கள், பாலிவுட் நடிகர்கள், மூத்த அமைச்சர்கள் ஆகியோர் ட்விட்டரில் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்தியாவுக்கு ஏற்பட்ட கலங்கத்திற்கு ட்விட்டர் தீர்வு அளிக்காது என காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "மேற்கத்திய விமர்சனங்களுக்கு இந்தியப் பிரபலங்கள் மூலம் மத்திய அரசு பதிலளிக்க வைப்பது வெட்கக்கேடாக உள்ளது.
மத்திய அரசின் பிடிவாதமான ஜனநாயகத் தன்மையற்ற செயல்கள் மூலம் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு ஏற்பட்ட கலங்கத்திற்கு கிரிக்கெட்டர்களின் ட்வீட்டுகள் தீர்வு அளிக்காது" எனப் பதிவிட்டுள்ளார்.