தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அயோத்தி பூமி பூஜை விழாவில் தலித்துகள் புறக்கணிப்பு - சௌத்ரி அமர் சிங் - அப்னா தளம் (எஸ்)

லக்னோ : அயோத்தி ராமர் கோயிலின் பூமி பூஜை விழாவில் தலித்துகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாஜக கூட்டணி கட்சியான அப்னா தளம் (எஸ்) தலைவரும், ஷோரத்கர சட்டப்பேரவை உறுப்பினருமான சௌத்ரி அமர் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அயோத்தி பூமி பூஜை விழாவில் தலித்துகள் புறக்கணிப்பட்டுள்ளனர் - சௌத்ரி அமர் சிங்
அயோத்தி பூமி பூஜை விழாவில் தலித்துகள் புறக்கணிப்பட்டுள்ளனர் - சௌத்ரி அமர் சிங்

By

Published : Aug 4, 2020, 6:23 PM IST

இது தொடர்பாக இன்று (ஆகஸ்ட் 4) செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி காட்டும் அவசரத்தையும் நாட்டின் ஏழை மக்களுக்கு வீடுகள் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதிலும் காட்ட வேண்டும். நாளை (ஆகஸ்ட் 5) நடைபெறவுள்ள அந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் மோடி கலந்து கொள்ளவுள்ளார். அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ஆனால், அயோத்தி பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் தலித் மக்களும், தலைவர்களும் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். கோயிலுக்காக போராடியவர்களுக்கு அழைப்பில்லை. கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளையில் பிற்படுத்தப்பட்ட, எஸ்.சி மற்றும் எஸ்.டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. அது ஒரு 'வேத் பிரதா அறக்கட்டளை'யாகவே தெரிகிறது. ராமர் பாஜகவை மட்டுமே சேர்ந்தவர் என்று அவர்கள் சொல்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு நாட்டின் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தையும் அழைக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details