உத்திரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 17வயதான விகாஷ் என்ற பட்டியலின சிறுவனை ஆதிக்கசாதி வெறியர்கள் நான்கு பேர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 6ஆம் தேதியன்று சிறுவன் விகாஷ் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது லாலா சௌகான், கரோம் சௌகான், ஜாஸ்வீர், பூஷன் ஆகிய உயர்சாதியினர், துப்பாக்கியால் சிறுவனை சுட்டனர்.
இது குறித்து சிறுவனின் தந்தை கூறுகையில், “தூப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதும் நாங்கள் எழுந்து பார்த்தபோது, விகாஷ் ரத்தவெள்ளத்தில் கிடந்தான். அவனை மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது வழியிலேயே உயிரிழந்தான். கடந்த சில நாட்களுக்கு முன், டோம்கேரா கிராமத்திலுள்ள கோயிலுக்கு எனது மகன் சென்றான். அதனால் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே விகாஷ் கொலை செய்யப்பட்டான்" என்றார்.