தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தலித் தம்பதி தாக்குதல் வழக்கு: காவலர்கள் 6 பேர் பணியிடை நீக்கம்! - Dalit couple attack

போபால்: மத்தியப் பிரதேசத்தில் தலித் தம்பதியினர் தாக்கப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய ஆறு காவலர்களை அம்மாநில அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.

Dalit couple  Madhya Pradesh  Guna  anti-encroachment drive  police brutality  தலித் தம்பதியினர் தாக்குதல்  மத்தியப் பிரதேசம்  மபி தலித் தம்பதியினர் தாக்குதல்  Dalit couple attack  தலித்
ம.பி.,தலித் தம்பதி தாக்குதல்: ஆறு காவலர்கள் பணியிடை நீக்கம்

By

Published : Jul 17, 2020, 11:58 AM IST

மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் அரசாங்க நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்ததாகக் கூறி தலித் தம்பதியினர் ஒருவரை அம்மாநில காவல்துறையினர் கடுமையாகத் தாக்கினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது.

காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். ராகுல் காந்தி, மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத், மாயாவதி உள்ளிட்டோர் இந்த வீடியோவை பகிர்ந்து தங்களது கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.

காவல்துறையின் இந்த கொடூரச் செயலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்தியா முழுவதிலிருந்தும் மக்கள் வலியுறுத்தினர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மத்தியப் பிரதேச பாஜக அரசு, இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியது.

அதன்படி, குணா மாவட்டத்தின் ஆட்சியாளர் விஷ்வநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் ஆறு பேரை இடைநீக்கம் செய்து இன்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: விசாரணைக்கு வருகிறது பல்கர் கும்பல் தாக்குதல் வழக்கு

ABOUT THE AUTHOR

...view details