தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தாத்ரா நாகர் ஹவேலியில் திடீர் தீ விபத்து! - எட்டு தீயணைப்பு வாகனங்கள்

சில்வாசா: தாத்ரா நாகர் ஹவேலியில் உள்ள வேதிப்பொருள் ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ மளமளவென பரவி கட்டுக்கடங்காமல் எரிந்தது.

தாத்ரா நாகர் ஹவேலியில் திடீர் தீ விபத்து!

By

Published : May 20, 2019, 9:14 AM IST

மேற்கு இந்தியாவின், குஜராத்-மகராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையே உள்ள ஒன்றியப் பகுதியான (union territory) தாத்ரா நாகர் ஹவேலியில் சில்வசா நகரில் வேதிப்பொருள் ஆலை ஒன்று இயங்கிவருகிறது.

இந்த ஆலையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் தீயானது மளமளவென பரவி கட்டுக்கடங்காமல் எரிந்தது. இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் அடர்த்தியான கரும்புகை சூழ்ந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த எட்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. முதற்கட்ட தகவலின்படி, இந்த தீ விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிகிறது.

ABOUT THE AUTHOR

...view details