தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அஸ்ஸாமில் நான்கு மாத குழந்தையை விற்ற தந்தை கைது

கோக்ராஜர் (அஸ்ஸாம்): நான்கு மாத குழந்தையை 45 ஆயிரத்திற்கு விற்ற தந்தை, இரு தரகர்கள் உள்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அசாமில் நான்கு மாத குழந்தையை விற்ற தந்தை கைது
அசாமில் நான்கு மாத குழந்தையை விற்ற தந்தை கைது

By

Published : Jul 23, 2020, 10:31 AM IST

அஸ்ஸாம் மாநிலம் கோக்ராஜர் மாவட்டத்தில் கொசுகான் பகுதியில் உள்ள டோண்டுலா மாண்டரியா கிராமத்தில் தினேஷ் பிரம்மா என்பவர் தனது நான்கு மாத குழந்தையை தரகர்கள் பிரணிதா நர்சரி, ரீட்டா பிரம்மா ஆகியோர் முலம் கர்பி அங்லாங்கைச் சேர்ந்த ஒரு குடும்பத்திற்கு 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது

இச்சம்பவம் குறித்து அறிந்த கிராமவாசிகள் கொசுகான் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து, நெடான் (NEDAN) அறக்கட்டளையின் தலைவரும், கச்சுகான் காவல்துறையினரும் பெண் குழந்தையை தரகர் பிரணிதா நர்சரியிடமிருந்து மீட்டனர்.

இது குறித்து நர்சரி, கோக்ராஜரின் நெடான் அறக்கட்டளையின் தலைவர் திகம்பர் கூறும்போது, "தினேஷ் பிரம்மா குஜராத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இருப்பினும், ஊரடங்கு விதிக்கப்பட்டதால் அவர் வீடு திரும்ப வேண்டியிருந்தது. கடந்த சில மாதங்களாக குடும்பத்தை நடத்துவதற்கான நிதி நெருக்கடி அவரை குழந்தையை விற்க வேண்டிய சூழலுக்கு தள்ளியது" எனக் கூறினார்.

இதையடுத்து, பிரிவு (யு / எஸ்) 370 ஐபிசியின் கீழ் கொசுகான் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, எண் 99/20 பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குழந்தை விற்பனையில் ஈடுபட்டதற்காக குழந்தையின் தந்தை, இரண்டு தரகர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details