தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரசவ வலியால் துடித்து கர்ப்பிணியை தோளில் சுமந்துச் சென்ற எம்.எல்.ஏ. - பிரசவ வலியால் துடித்து பெண்ணை தோளில் சுமந்துச் சென்ற சட்டப்பேரவை உறுப்பினர்

தபுகான்: ஒடிசா மாநிலத்தின் சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர், பிரசவ வலியால் பாதிக்கப்பட்ட பெண்ணை தனது தோளில் சுமந்துச் சென்ற காட்சி வைரலாகிவருகிறது.

dabugaon mla Carries pregnant on his shoulder
dabugaon mla Carries pregnant on his shoulder

By

Published : Feb 10, 2020, 10:38 PM IST

ஒடிசா மாநிலத்தின் தபுகான் சட்டப்பேரவை உறுப்பினராக பிஜூ ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த மனோகர் ரந்தாரி உள்ளார். இவர் தொடர்ந்து நல்ல செயல்கள் செய்துவருவதன் மூலம் தனது தொகுதி மக்களால் பாராட்டப்பட்டுவருகிறார்.

அந்த வகையில், குசும்கும்தா என்ற கிராமத்தை பார்வையிட மனோகர் ரந்தாரி சென்றார். காடுகளாலும் மலைகளாலும் சூழப்பட்ட அக்கிராமத்தில், வாகனங்கள் நுழைவது என்பது சற்றே கடினமாக கருதப்படுகிறது. இந்நிலையில் மனோகர் ரந்தாரி, குசும்கும்தா கிராமத்தை பார்வையிட்டபோது திடீரென்று ஜெம்மா பெஹரா என்ற கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானதால் சற்றும் யோசிக்காமல், அந்தப் பெண்ணை தனது தோளில் சுமந்து சென்ற மனோகர் ரந்தாரி, தனது காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இந்தச் செயலை பலரும் பாராட்டிவரும் சூழலில், அவர் அந்தப் பெண்ணை சுமந்துச் சென்ற வீடியோ வைரலாகிவருகிறது.

பிரசவ வலியால் துடித்து பெண்ணை தோளில் சுமந்துச் சென்ற எம்.எல்.ஏ

இதையும் படிங்க: சமஸ்கிருதம் செத்த மொழி - நாடாளுமன்றத்தை அலறவிட்ட தயாநிதி மாறன்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details