குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று காலை சமையல் எரிவாயு உருளைகளை ஏற்றிவந்த மினி லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அப்போது அவ்வழியாக பேருந்து ஒன்று பள்ளிக்குழந்தைகளை ஏற்றிக்கொண்டுவந்தது.
லாரிக்கு மிக அருகில் வந்தவுடன் பேருந்தை ஓட்டுநர் நிறுத்தியுள்ளார். அப்போது திடீரென லாரியிலிருந்த எரிவாயு உருளைகள் அடுத்தடுத்து வெடித்துத் சிதறி தீப்பிடித்தன.
இதைத் தொடர்ந்து, பள்ளி பேருந்திலிருந்த குழந்தைகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். எரிவாயு உருளை வெடித்த துகள்கள் சிதறி பள்ளி பேருந்து மீது பட்டு தீப்பிடித்து எரிந்தது.
தீயை அணைக்கும் பணி தீவிரம் எரிவாயு உருளை விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சரியான நேரத்தில் குழந்தைகள் அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதையும் படிங்க: இடையூறு செய்த கார் - கைப்பற்றிய காவல் துறை