தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தொடங்கியதையடுத்து கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் மழை பெய்துவருகின்றது. இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்தத்தாழ்வு உருவாகிவருகிறது. இந்தக் காற்றழுத்தாழ்வு தற்போது புயலாக மாறி உள்ளது. இந்தப் புயலுக்கு வானிலை ஆய்வு மையம் 'வாயு' என பெயர் வைத்துள்ளனர்.
அரபிக்கடலில் உருவான 'வாயு': குஜராத் மாநிலம் 'உஷார்' - போர்பந்தர்
தென்கிழக்கு அரபிக்கடலில் 'வாயு புயல்' உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
File pic
இந்தப் புயலானது குஜராத்தின் போர்பந்தர், மஹுவா பகுதியில் நாளை மறுநாள் (ஜூன் 13) கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது 130 கி.மீ. முதல் 140 கி.மீ. காற்றின் வேகம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குஜராத்தில் பலத்த மழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குஜராத் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரம் காட்டிவருகிறது.