தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான நிசார்கா புயல் வடக்கு நோக்கி நகர்ந்து மகாராஷ்டிராவை புரட்டிப் போட்டது. ராய்காட் மாவட்டத்தில் கரையை கடந்த புயலால், மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. அப்போது வீசிய காற்றால் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது. குறிப்பாக தானே மாநகராட்சியில் 25.59 மி.மீ மழை பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்தது.
தற்போது, புயலால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்யும் பணியில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், ராய்காட் மாவட்டத்திற்கு செல்லும் அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ங்களை பார்வையிடவுள்ளார். விவசாயிகள், கிராம மக்கள் ஆகியோருக்கு உதவும் நோக்கில் சேதத்தின் தன்மையை அறிக்கையாக இரண்டு நாள்களில் சமர்பிக்க அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.