தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிசார்கா புயலால் மும்பையில் கனமழை - மகாரஷ்டிரா நிசார்கா புயல்

மும்பை: தீவிர புயலாக உருவெடுத்துள்ள நிசார்கா இன்று மாலை மகாராஷ்டிராவில் கரையைக் கடக்க உள்ள சூழலில், மும்பையில் கனமழை பெய்து வருகிறது.

nisarga
nisarga

By

Published : Jun 3, 2020, 10:27 AM IST

தென்கிழக்கு அரபிக் கடலில் நேற்று உருவான நிசார்கா புயல் வடக்கு நோக்கி நகர்ந்து மகாராஷ்டிராவின் அலிகார்க், ராஜ்காட் மாவட்டங்களிலும், குஜராத்தின் தெற்கு பகுதிகளிலும் இன்று மாலை கரையைக் கடக்கவுள்ளது.

இந்த புயல் காலை 5.30 மணிக்குத் தீவிர புயலாக உருவெடுத்துள்ள நிலையில், கரோனா வைரஸ் தாக்கத்தால் தத்தளித்து வரும் மும்பையில் கனமழை பெய்து வருகிறது.

மும்பை அருகே புயல் கரையைக் கடப்பது என்பது கடந்த 100 ஆண்டுகளில் இதுவே முதல்முறை.

இதையடுத்து, மும்பை உள்ளிட்ட மகாராஷ்ட்ராவின் கரையோர மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

மும்பையில் பெய்துவரும் கனமழை

தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மகாராஷ்டிராவில் களமிறக்கப்பட்டுள்ளனர். மேலும், 93 உயிர்க்காப்புப் படகுகள், மீட்புப் படகுகள் மும்பையின் ஆறு முக்கிய சந்திப்புகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க : உத்தரகண்ட் தலைநகராக கெய்சைனை அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி

ABOUT THE AUTHOR

...view details