அரபிக் கடலில் உருவாகியுள்ள க்யார் புயலின் தாக்கத்தால் கர்நாடக மாநிலத்தில் நேற்றிலிருந்து தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. முன்னதாக கடலோர மாவட்டங்களான தக்ஷின கன்னட, உடுப்பி, உத்தர கன்னடவிற்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக தக்ஷின கன்னட மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதியில் 90 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் புயல்காற்று வீசுவதால் ஏராளமான மரங்கள் சாய்ந்ததோடு வீடுகளும் சேதமடைந்துள்ளன.
புயலானது மகாராஷ்டிராவில் உள்ள கடலோரப் பகுதியான ரத்தனகிரியில் மையம் கொண்டுள்ளது என்றும், அதன் வலிமை இன்னும் 12லிருந்து 36 மணி நேரத்தில் அதிகரிக்கும் எனவும் இந்திய வனிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.