அதிதீவிர புயலான ஃபோனி, ஒடிசா மாநிலம் பூரி அருகே கடந்த 3ஆம் தேதி அன்று காலை கரையைக் கடக்கத் தொடங்கியது. காலை 8 மணிக்கு தொடங்கி 10 மணி அளவில் ஃபோனி புயல் முழுமையாக கரையைக் கடந்தது.
ஃபோனி புயலால் ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்நது, கடந்த 6ஆம் தேதி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார். அதன்பின் பேசிய அவர், ஏற்கனவே ரூ. 381 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்ட நிலையில், உடனடியாக ரூ. 1000 கோடி விடுவிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் ஃபோனி புயல் தாக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது.