தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’புல் புல்’ புயல்: கொல்கத்தா விமான நிலைய சேவை நாளை காலை 6 மணி வரை ரத்து! - Cyclone Bulbul impact

டெல்லி: ’புல் புல்’ புயல் தீவிரமடைந்துள்ளதால் கொல்கத்தா விமான நிலைய சேவையை நாளை காலை 6 மணிவரை ரத்து செய்வதாக இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

புயல்

By

Published : Nov 9, 2019, 10:59 PM IST

வங்க கடலில் உருவான ’புல் புல்’ புயல் தற்போது அதிதீவிரம் அடைந்துள்ளதாகவும் 70 - 80 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசக்கூடும் என்பதால் மேற்கு வங்க, வங்காளதேச கடற்கரையோரப் பகுதிகளில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் சாகர் தீவில் மையம் கொண்டுள்ள இந்தப் புயல் மேற்கு வங்கம் - வங்காளதேசம் இடையிலுள்ள சுந்தர்பன் தீவு வழியாக இன்றிரவு கடக்கும்போது, அது வலுவிழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில், மேற்கு வங்கத்தில் தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். புயலின் பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் வசிக்கும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், மக்களுக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருவதாக கொல்கத்தா அரசு தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கையால் கொல்கத்தா விமான நிலைய சேவையை நாளை காலை 6 மணிவரை ரத்து செய்வதாக இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்தது.


மேலும் படிக்க: மகா புயல் எதிரொலி: குஜராத்தில் ஒதுங்கிய 600 தமிழக மீனவர்கள் - உதவுமா அரசு
?

ABOUT THE AUTHOR

...view details