வங்க கடலில் உருவான ஆம்பன் புயல் மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மட்டுமில்லாது வங்கதேசத்தையும் இந்தப் புயல் கடுமையாகத் தாக்கியுள்ளது. தீவிரமான புயல் பாதிப்புக்குள்ளான மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் 1.6 கோடி குழந்தைகள் இந்தப் புயல் காரணமாக கடுமையான பாதிப்பை நேரடியாகவும் மறைமுகமாகவும் சந்தித்திருக்கிறார்கள் என யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.
யுனிசெப் அமைப்பு இரு நாடுகளின் நிலைமையும் தீவிரமாகக் கண்காணித்துவருகிறது. பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் பலர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நோய்த்தொற்று காலத்தில், அந்த மக்களின் பாதுகாப்பை முறையாக உறுதிசெய்ய வேண்டும்.