ஒரே இரவில் அதி தீவிரப் புயலாக மாறிய ஆம்பன் புயல், அடுத்த 12 மணி நேரத்தில் 'சூப்பர் புயலாக' மாற வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்தப் புயல் வங்கதேச கடற்கரைப் பகுதியில் புதன்கிழமையன்று கரையைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தீவிர புயலான ஆம்பன், வங்க கடலின் தென்கிழக்குப் பகுதியிலிருந்து, வடக்கு, வடகிழக்காக கடந்த 6 மணிநேரத்தில் 13 கி.மீ., வேகத்தில் சென்று வருகிறது. இது மேலும் தீவிரமடைந்து, அதி தீவிரப்புயலாக உருவெடுத்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.