வங்க கடலில் உருவான அம்பான் புயல் மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்திய கடலோர காவல்படை இந்த இரு மாநிலங்களிலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை பணிகளை தொடங்கியுள்ளது.
அதன்படி மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் இருந்து வங்க கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கப்பல்கள், மீன்பிடி படகுகளை துறைமுகத்திற்குத் திரும்புமாறு கடலோர காவல்படை வலியுறுத்தியுள்ளது.
மேலும் இந்த தகவல் உள்ளூர் மொழியில் வழங்கப்பட்டது என்றும் மக்களை பாதுகாக்கும் பணியில் அதிக கவனம் செலுத்தி வருவதாக சிபிஆர்ஓ கொல்கத்தா தெரிவித்துள்ளது.