தெற்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்ட 'ஆம்பன்' புயல், அதிதீவிரப் புயலாக மாறி மேற்குவங்கம் - வங்கதேசம் இடையே கரையைக் கடந்தது. இதனால் மேற்கு வங்க மாநிலம், கரோனாவினால் ஏற்பட்ட பாதிப்புகளை விட கடுமையான பாதிப்பிற்குள்ளாகியதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
மாநிலம் முழுவதும் ஆம்பன் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றிருக்கும் நிலையில், புயல் காரணமாக மாநிலத்தில் கரோனா வைரஸ் பரிசோதனைகளின் அளவு பாதியாக குறைந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புயல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் ஆய்வகங்கள் திறப்பதில் சிக்கல் இருந்தததாகவும், புயல் கரையைக் கடந்த பின் வெள்ளம், சூறைக்காற்றினால் சாலைகள் மிகுந்த சேதாரத்திற்குள்ளாகி உள்ளதால் அவசர ஊர்திகளும் கூட சாலைகளில் பயணிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.