தமிழ்நாடு

tamil nadu

இணையத்தில் கசிந்த 2.9 கோடி இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்கள்!

By

Published : May 24, 2020, 2:14 PM IST

இந்தியாவில் வேலைதேடும் 2.9 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் வெளியாகியுள்ளதாக ஆன்லைன் உளவு நிறுவனமான சைபிள் தெரிவித்துள்ளது.

Cyber criminals
Cyber criminals

சைபர் தாக்குதல்கள் என்பது கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் அதிகரித்துவருகிறது. இந்நிலையில், இந்தியாவில் வேலை தேடும் 2.9 கோடி பேரின் ரெஸ்யூம்கள் டார்க் வெப்பில் இலவசமாக அணுகக்கூடிய வகையில் வெளியாகியுள்ளதாக ஆன்லைன் உளவு நிறுவனமான சைபிள் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில்,"வேலை தேடும் 2.9 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் இலவசமாக அணுகக்கூடிய வகையில் வெளியாகியுள்ளது. இதுபோல தகவல்கள் இணையத்தில் கசியவிடப்படுவது வழக்கம்தான் என்றாலும் இதில் பலகோடி பேரின் கல்வி தகுதி, வீட்டு முகவரி போன்ற விஷயங்கள் கசிந்துள்ளன.

வேலை தேட பயன்படுத்தப்படும் ஏதோ ஒரு தளத்திலிருந்துதான் இவ்வளவு கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டிருக்கும். எங்கிருந்து தகவல்கள் திருடப்பட்டன என்பது குறித்து ஆராய்ந்துவருகிறோம்.

அடையாள திருட்டுகள், கார்ப்பரேட் உளவு போன்றவற்றுக்காக சைபர் கிரிமினல்கள் எப்போதும் இதுபோன்ற தனிப்பட்ட தகவல்களை குறிவைப்பார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:13 லட்சம் கிரெடிட், டெபிட் கார்ட் தகவல்கள் டார்க் வெப் கசிந்தது!

ABOUT THE AUTHOR

...view details