காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமையகத்தில் நடந்துவருகிறது. காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தி விலகியதையடுத்து நடக்கும் முதல் செயற்குழுக் கூட்டம் என்பதால் இந்தக் கூட்டத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, கே. சி. வேணுகோபால், சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்திய தேசிய காங்கிரசின் அடுத்தத் தலைவர் யார்? - காங்கிரஸ்
டெல்லி: இன்று நடக்கும் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் அடுத்தத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.
ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அந்தந்த மாநில தலைவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. முன்னதாக, பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், ஒரு இளைஞர்தான் காங்கிரஸ் கட்சியின் அடுத்தத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு மாறாக காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சுசில் குமார் ஷிண்டே ஆகியோரில் ஒருவர் கட்சியின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என அக்கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.