திருவனந்தபுரத்தில் தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரித்து வரும் 14.82 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர் அளித்த அறிக்கையின் நகலை, கூடுதல் தலைமை நீதித்துறை நீதிமன்றத்தில் சுங்கத் துறையினர் சமர்ப்பித்தனர்.
32 பக்க அறிக்கை நீதிமன்றத்தில் சீல் வைக்கப்பட்ட உறை ஒன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. தங்கக் கடத்தல் வழக்கில், சுங்கத் துறை அறிக்கை சமர்ப்பித்தது, இதுவே முதல் முறையாகும். முன்னதாக ஸ்வப்னா சுரேஷிடம் ஐந்து நாட்கள் விசாரணை நடத்தியது, சுங்கத் துறை.