தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

செல்ஃபோன் சேவைகள் முடக்கப்பட்டதால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன - ஜம்மு ஆளுநர் - Kahsmir News

ஸ்ரீநகர்: செல்ஃபோன் சேவைகள் முடக்கப்பட்டதால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

Sathyapal Malik

By

Published : Oct 15, 2019, 9:00 AM IST

ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தொலைத்தொடர்பு வசதிகள் முடக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் செல்ஃபோன் சேவைகள் தொடங்கப்பட்டது.

இதுகுறித்து அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், ‘செல்ஃபோன் சேவைகளைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். எனவேதான், அதனை முடக்கினோம். தொலைத்தொடர்பு வசதிகள் முடக்கப்படுவதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், எங்களுக்கு காஷ்மீரிகளின் வாழ்க்கைதான் முக்கியம். இணைய வசதிகள் கூடிய சீக்கிரத்தில் தொடங்கப்படும்.

பழங்காலத்தில் செல்ஃபோன் சேவைகள் இல்லாமல்தான் மக்கள் வாழ்ந்தனர். மக்களின் வாழ்க்கையை காப்பாற்றியுள்ளோம். தற்போது சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்கு வர ஆரம்பித்துள்ளனர்’ என்றார்.

ABOUT THE AUTHOR

...view details