ஆகஸ்ட் 4 & 5: ஜம்மு காஷ்மீரில் முழு ஊரடங்கு! - சிறப்பு சட்டம்
ஸ்ரீநகர்: ஆகஸ்ட் 4 மற்றும் 5 ஆகிய தினங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளது என்ற காரணத்தால் ஜம்மூ காஷ்மீரில் அன்றைய தினங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Curfew imposed in Srinagar on Aug 4 and 5
370 & 35 A ஆகிய காஷ்மீரின் சிறப்பு சட்டம் நீக்கப்பட்டு வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதியுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது. கரோனா சூழலில் அன்று போராட்டக்காரர்களும் பிரிவினைவாதிகளும் பிரச்னை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்ற காரணத்தால், ஸ்ரீநகர் மேஜிஸ்டிரேட் ஆகஸ்ட் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கை அறிவித்துள்ளார். மருத்துவ தேவைகளுக்கு மட்டும் வெளியே செல்ல அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.