வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் இரு தரப்பினரிடையே மோதலாக வெடித்துள்ளது. இதையடுத்து அங்குள்ள ஆறு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தின் தாக்கம் வடகிழக்கு மாநிலங்களில் கூடுதலாகவே உள்ளது. வடகிழக்கு, மேற்கு வங்க மாநிலங்களில் குடியேற்றம் மேற்கொண்ட மக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், இந்தச் சட்டம் அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, இச்சட்டத்திற்கு எதிராக அசாம் மாநிலத்தில் கடும் போராட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் இச்சட்டத்தால் அசாம் மக்களுக்குப் பாதிப்பில்லை என உறுதியளித்தார்.