தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

144 ஊரடங்கு உத்தரவு: காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம்

ஸ்ரீநகர்: காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அம்மாநிலத்தில் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது.

kash

By

Published : Aug 5, 2019, 11:49 AM IST

காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி கடந்த வாரம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து, அமர்நாத் யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், வெளிமாநில மாணவர்கள் அனைவரும் வீடு திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டது.

இந்த சூழ்நிலையில், காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் இன்று காலை முதல், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தொலைத்தொடர்பு, இணை சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, அம்மாநிலத்தின் முக்கிய கட்சித் தலைவர்களான உமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்டோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details