தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் நடந்த சமய மாநாடு ஒருங்கிணைப்பாளர் மெளலானா சாத் மீது வழக்குப் பதிவு! - Corona Virus Outbreak

டெல்லி: ஏப்ரல் 8ஆம் தேதி நடந்த சமய மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரான மெளலானா சாத் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

culpable-homicide-charge-against-maulana-saad
culpable-homicide-charge-against-maulana-saad

By

Published : Apr 15, 2020, 6:02 PM IST

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மெளலானா சாத் ஏப்ரல் 8ஆம் தேதி டெல்லியில் சமய மாநாடு ஒன்றை ஒருங்கிணைத்திருந்தார். இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினரோடு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

இதனிடையே, அந்த மாநாட்டில் கலந்துகொண்ட பல்வேறு தரப்பினரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கரோனா வைரஸ் அதிகரித்து வந்த நிலையில், மாநாட்டை ஒருங்கிணைத்ததுடன், அங்கு வந்தவர்களின் விவரங்கள் ஆகியவற்றை மறைத்தும் வைரஸ் பரவுவதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கூட்டத்தை ஒருங்கிணைந்த மெளலானா சாத் மீது காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதிலிருந்து அவர் எங்கு இருக்கிறார் என்பது பற்றி காவல்துறை விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:டெல்லி மாநாட்டுக்கு அனுமதி அளித்தது யார்? சரத் பவார் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details